சென்னை:
தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது.
வடமாநிலங்களை வாட்டி எடுத்தும் வரும் கடும் பனிப்பொழிவு இந்த ஆண்டு தமிழகத்தையும் வாட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழக்ததின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் போகிப்பண்டிகை கொண்டாப்பட்டது. அதிகாலையிலேயே பலர் தங்களது வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர். இதனால் பல பகுதிகளில் கடும் புகை மூட்டமும் நிலவியது.
இந்த நிலையில், பனிப்பொழிவும், புகை மூட்டமும் இணைந்து ஏற்படுத்திய இருள் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் செல்லவிருந்த சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதுபோல பெங்களுர், புனே, திருச்சி, மும்பை, அந்தமானில் இருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.