ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியா வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான(ஐசிசி) மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் பேட்டிங் தரவரிசையை இன்று வெளியிட்டது. அதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 2வது இடமும், மேக் லேனிங் 3வது இடமும், நியூசிலாந்து வீராங்கனை எமி சாட்டர்வொயிட் 4வது இடமும் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்தியாவின் மிதாலிராஜ் 5வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு 15 போட்டிகளில் பங்கேற்ற ஸ்மிரிதி மந்தனா இரு சதமும், 8 அரைசதமும் எடுத்துள்ளார். இதன் காரணமாக ஸ்மிரிதி மந்தனா சர்வதேச பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதேபோன்று பவுலிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜூலான் கோஸ்லாமி 4வது இடத்திலும், பூனாம் யாதவ் 8வது இடத்திலும், தீப்தி ஷர்மா 9வது இடத்திலும் உள்ளனர்.