அபுதாபி:

சிய சாம்பியனான  ஐப்பானை வீழ்த்திய கத்தார் அணி, ஆசிய சாம்பியனாக  சாதனை படைத்துள்ளது. கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி (ஏஎஃப்சி) தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடை பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற  கடைசி போட்டியில், முன்னாள் ஆசிய சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி கத்தார் அணி  ‘சாம்பியன்’ பட்டத்தை பறித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நாக் அவுட் போட்டிகளின் முடிவில், அரையிறுதிக்கு, ஈரான், ஜப்பான், கத்தார், யு.ஏ.இ., அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் ஜப்பான், கத்தார் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறியது.

அபுதாபியில் நடைபெற்ற  ஃபைனல் போட்டியில்,  கத்தார் அணி, ஜப்பான் அணியை எதிர் கொண்டது. இதில் தொடக்கம்  முதல் ஆக்ரோஷத்துடன் விளையாடி  கத்தார் அணியை சேர்ந்த அலி  ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து வெற்றிக்கு அச்சாரமிட்டார்.

அதைத்தொடர்ந்து ஹதீம் 27 நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து விளையாட்டு மேலும் விறுவிறுப்பு அடைந்தது. கத்தார் அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஜப்பான் அணியின் மினாமினோ 69 நிமிடத்தில்ஒரு கோல் அடித்து ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார்.

தொடர்ந்து விளையாட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆட்டத்தை சமன் படுத்த ஜப்பான் கடுமையாக போராடிய நிலையில், பெனால்டி விழுந்தது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கத்தார் அணி வீரர்  அக்ரம் ஹசன் ஹபிப் 83வது நிமிடத்தில் 3வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன் காரணமாக 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் முதன்முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. தனது 63 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது கத்ததார்.

இந்த வெற்றி காரணமாக, அடுத்த 2021-ம் ஆண்டில் நடக்கும் ‘பிபா’ கான்பெடரேஷன் கோப்பை போட்டிக்கும் கத்தார் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.