சென்னை:
தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னையிலும் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் சென்னையில் வெப்பம் சற்று குறைந்து, லேசான குளிர்க்காற்று வீசி வந்த நிலையில், இன்று சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலை பகுதிகளில் மழை பெய்தது.
சோழிங்க நல்லூர், சிறுசேரி, நாவலூர் உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது. மழையை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஓஎம்ஆர் சாலையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மழை பெய்தது மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது…
Thanks: Prem Palanivel and Kalyanasundaram twitter
Patrikai.com official YouTube Channel