சென்னை:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களமிறங்கி உள்ளது.

இந்த நிலையில், பிரபல தேர்தல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பிரசாந்த் கிஷோர், கடந்த 2012 ஆம் வருடம் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பாஜகவுக்காக பணி புரிந்து மோடியை முதல்வராக்கினார். அத்துடன் அவர் 2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பணியாற்றி அவரை பிரதமர் பதவியில் ஏற்கனவே  அமர வைத்தார். கடந்த 2015ல் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் கூட்டணிக்காக பணி ஆற்றிய பிரசாந்த் கிஷோர் மூலம் அந்த கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. அது மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் பணி ஆற்றினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

அதைத்தொடர்ந்தே ஜெகன் மோகன் ரெட்டி பிரசாந்த் கிஷோரை நாடினார். அவரது  தேர்தல்வியூகம் காரணமாகவே,,  10ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து வந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்கு அனுப்பி விட்டு, ஆட்சியை கைப்பற்றிய ஜெகன்மோகன் வரலாறு காணாத வெற்றியை பெற்றதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கிஷோரை நாடும் அரசியல் கட்சிகள் அதிகரித்து வருகின்றன.கடந்த வாரம்  மேற்குவங்க முதல்வர் மம்தா பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஆலோசகரராக நியிமத்து உள்ள நிலையில், அதிமுகவும், பிரசாந்த் கிஷோரை நாடியதாக தகவல்கள் வெளியானது… அதுபோல திமுக சார்பில் ஸ்டாலின் மருமகனும் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் சமுக வலைதளங்களில் செய்திகள் பரவின.

ஆனால், அவை அனைத்துக்கும் மேலாக, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகம் அமைத்து தர கமல் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்து.

இது தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.