கிலோ ரூ.5க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்: விவசாயிகள் அதிர்ச்சி

Must read

நாமக்கல்:

ந்த ஆண்டு சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விற்பனை மிகவும் சரிந்துள்ளது.  கிலோ வெங்காயம் ரூ.5க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் விவசாயிகள்  பேரதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

சின்ன வெங்காயம் நடவு செய்போது கிலோ ஒன்றுக்கு ரூ.50க்கும் மேற் விற்பனையானது,. அதன் காரணமாக வெங்காயம் விற்பனை சூடுபிடிக்கும் என ஏராளமான விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டனர்.

நாமக்கல் அருகேயுள்ள நவலடிப்பட்டி, அம்பாயிபாளையம், வேலம்பட்டி, மகாதேவிபுதூர், மாணிக்கவேலூர் மூலக்காடு உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கர் வெங்காயம் நடவு செய்ய ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை தேவைப்படுவதாக கூறும் விவசாயிகள்,  உழவுப்பணி, உரம், ஆள் செலவு, மருந்துச் செலவு எனக் கணக்கிட்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகிறது. வெங்காய பயிர் 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு தயராகி விடும். தற்போது கார்த்திகை பட்டத்தில் பயிரிட்ட சின்னவெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், விலையோ மிகவும் குறைந்து உள்ளது என்று சோகத்துடன் தெரிவித்து உள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 50 முதல் 60 மூட்டை வரை சாகுபடி  செய்யப்படும் வெங்காயம் அடிமாட்டு விலைக்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்வதால், , செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 110 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு நாமக்கல் அருகேயுள்ள வெங்காய பட்டறைகளில் (தோட்டங்களில்) ஒரு கிலோ 5 முதல் 10க்கு தான் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி செல்கிறார்கள்.

சின்னவெங்காயம் தினசரி சந்தை, உழவர் சந்தைகளில் 15 முதல் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசே வெங்காயத்துக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும” எனத் தெரிவித்துள்ளனர்.

 

More articles

Latest article