அலகாபாத்:

த்தரபிரதே மாநிலத்தின் அலகாபாத்தின் பரபரப்பான பகுதியில் 3 கொலை உள்பட உள்பட 6 கொலைகள் சுமார் 12 மணி நேரத்திற்குள் நடைபெற்றது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதையடுத்து, அலகாபாத் எஸ்.எஸ்.பி அதுல் ஷர்மாவை மாநில அரசு இடைநீக்கம் செய்து  உத்தரவிட்டு உள்ளது.

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று அலகாபாத் நகரில் 12 மணி நேரத்திற்குள் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது அலகாபாத்தையே  உலுக்கி உள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் கட்சி  உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இதனால்  அதிர்ச்சியடைந்த மாநில அரசு, அலகாபாத் எஸ்.எஸ்.பி அதுல் ஷர்மாவை இடைநீக்கம் செய்து அவருக்கு பதிலாக சத்யார்த்த் அனிருத் பங்கஜை நியமித்து உள்ளது.

டிரான்ஸ்-கங்கா பகுதியில் உள்ள ஹசன்பூர் கோராரி கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு இளம் தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அன்று பிற்பகல் தூமங்கஞ்சில் உள்ள சாவுஃபட்கா (Chaufatka  )பகுதி அருகே அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் ஜார்ஜ்டவுனில் உள்ள அலகாபூர் பகுதிக்கு அருகே கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு 27 வயது இளைஞன் ஒரு அடையாளம் தெரியாதவரால்  சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த படுகொலைகளுக்கு காரணம், காவல்துறையினர் மெத்தனம் என்று பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த படுகொலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொடூர கொலைகள் காரணமாக,  தூமங்கஞ்ச் மற்றும் ராஜ்ரூப்பூர் போலீஸ் புறக்காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள்  இடைநீக்கம் செய்யப்பட்டனர்.