சென்னை:

மிழக அரசு 6 மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக மாற்றம்  செய்துள்ளது. சென்னை, சேலம் உள்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக் கழக பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றலாகி உள்ளார்.