ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்ற சிவகாசி தம்பதி

Must read

சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்- ஷர்மிளா தம்பதியினர், ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வரும் கார்த்திகேயன், ஷர்மிளா இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த இந்த தம்பதியினர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

தாசில்தார் லோகநாதன் இருவருக்கும் ஜாதி மதம் அற்றவர் என்று சான்று வழங்கினார்.

More articles

Latest article