தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ மூலம் முதல் படத்திலேயே வெற்றி கண்ட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது.
சில தினங்களுக்கு முன் தனுஷும், தெலுங்கு நடிகர் சேகர் கமுல்லாவும் இணையும் தெலுங்குப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. அந்த படத்தையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.