நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்கும் ‘ஏஜெண்ட்’ படத்தை இயக்கி வருகிறார் சுரேந்தர் ரெட்டி. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் அகிலுக்கு நாயகியாக புதுமுகம் சாக்‌ஷி வைத்தியா நடிக்கவுள்ளார்.

இன்று (ஜூலை 12) ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக அகில் உடலமைப்பின் தோற்றத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து தனது தோற்றத்தைப் பகிர்ந்து அகில், “365 நாட்களுக்கு முன், இயக்குநர் சுரேந்தர், உடலளவில், மனதளவில் நான் மாற வேண்டும் என்று சவால் விட்டார். சார், நீங்கள் எனக்குள் மூட்டிய தீ இந்தப் படம் முழுக்க கொழுந்துவிடும். உறுதியாகக் கூறுகிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.