ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்…..!

Must read

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். தனது எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ’கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மகளுடன் இணைந்து பாடியிருப்பார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

”18 வருடங்களுக்குப் பிறகு இன்று, என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More articles

Latest article