சென்னை: சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வாராந்திர செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்யப்பட்டுவதுடன், நாளை (சித்திரை 1ந்தேதி) தமிழ்ப்புத்தாண்டு தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
 திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்து சோழவரம் அருகே உள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை  தரிசனம் பிரசித்திப்பெற்றது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடுவது வழக்கம். சாதாரண நாட்களிலும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். ஆனால், தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளால், கோவிலில் பக்தர்கள் தரிசனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து,   பொன்னேரி ஆர்.டி.ஓ., செல்வம் தலைமையில் அறநிலையத் துறை, காவல், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, செவ்வாய் மற்றும் தமிழ் வருடப்பிறப்பு நாளில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஓ., செல்வம் உத்தரவில், செவ்வாய்க்கிழமைகளில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களால், கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி, பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் தரிசனம், சித்தரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.