‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!

Must read

சென்னை,
கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று  பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
karunanithi
தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் நிறுவனம் எனப்படும் சிப்பெட் நிறுவன தலைமை யகத்தை சென்னையில்இருந்து டெல்லிக்கும் மாற்றும் முடிவை அறிந்து தமிழக மக்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த அலுவலகத்தை மாற்றுவதற்கு நம்பதகுந்த அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் எதுவும் இல்லை. உண்மையில் இது மோசமான நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
‘சிப்பெட்’ நிறுவனம் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோ&கெமிக்கல் துறையின் கீழ் வருகிறது. நாட்டில் சாய தொழிற்சாலை கள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் தலைமை அலுவலகம் சென்னையில் மட்டுமே இருந்தது. தற்போது இது நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆக 27 மையங்களாக விரிவடைந்து பரவியுள்ளது.
2500 தொழிலாளர்கள் மற்றும் 6 ஆயிரம் மாணவர்களை கொண்டுள்ளது.
சென்னையில் உள்ள இதன் தலைமையகம் சர்வதேச தரத்துடனும் உயர்தரமான உபகரணங்களுடனும் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே மத்தியில் வாஜ்பாய் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் போது இதே நிலை எடுக்கப்பட்டது.
இந்த நிறுவனம் தொடர்ந்து லாபத்தில்இயங்கி வருகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் நுட்பத்தில் இந்திய  வரைபடத்தில் பெருமை மிகு இடத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
அதை தொடர்ந்து 20-11-1999 -ம் ஆண்டு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை மந்திரி ஆக இருந்த சுரேஷ்பிரபு தமிழ்நாட்டில் இருந்த சிப்பெட் தலைமையகத்தை  மாற்றும் திட்டம் இல்லை கடிதம் எழுதினார்.
அதன்  படி தமிழக மக்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்து வாஜ்பாய் அரசு அத்திட்டத்தை கைவிட்டது.
எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை  சென்னையில் இருந்து மாற்றும் நடவடிக்கையை  வாபஸ் பெற வேண்டும்.
உங்களிடம் இருந்து சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் எழுதி  உள்ளார்.cipet
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article