சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகிறார் ஈழத்தமிழர்….?

Must read

சிங்கப்பூர்:
லங்கையை  பூர்வீகமாகக் கொண்ட ஈழத்தமிழர் ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல இண்டர்நெட் தேடல் நிறுவனமான  யாகூவின் , சிங்கப்பூர் கிளை,  சிங்கப்பூரில்  அடுத்த பிரதமர் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு இலங்கையை பூர்விகமாக கொண்ட ஈழத்தமிழர் ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

தர்மன் சண்முகரத்னம்
தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர்  தேர்வுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் இந்த கருத்துகணிப்பை வெளியிட்டு உள்ளது.
இக்கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போது துணைப்பிரதமராக இருக்கும் தர்மன் சண்முகரத்தினம் தான் வரவேண்டுமென  பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது துணைபிரதமரான  59 வயதுடைய தர்மன் சண்முகரத்னம்,  சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கூறுகிறது.
இவருக்கு அடுத்த நிலையில், மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீத பேரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட்க்கு 25 சதவீத பேரும்,  பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங்ற்கு 24 சதவித பேரும்வீ ஆதரவு அளித்துள்ளதாகவும் யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி: தமிழ்வின்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article