சிங்கப்பூர்: 20ஆண்டுகளுக்கு பிறகு சிங்கபூர் நாட்டின்  தலைமையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் மே15ந்தேதி தனது பதவியை நிறைவு செய்வதாக  லீ சியென் லூங் (வயது 72)  அறிவித்து உள்ளார். 72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர்தான் அந்நாட்டின் பிரதமராக வும் இருந்து வருகிறார். இவர்  பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் என லீ சியென் லூங் கூறி உள்ளார்.

சிங்கப்பூர் — சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், மே 15-ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு ஆட்சியைப் பொறுப்பேற்கப் போவதாக அறிவித்தார், இது 20 ஆண்டுகளில் நகர-மாநிலத்தின் முதல் தலைமை மாற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 சமீபகாலமாக மக்கள் செயல் கட்சியின் அமைச்சர்கள்  மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ற்போது, 51 வயதாகும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், 13 ஆண்டுகளுக்குமுன் தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவிற்குத் தலைவராக அக்குழுவின் சக உறுப்பினர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர்.

அதற்கு முன்னதாக, திரு லீக்கு அடுத்தபடியாக நாட்டின் பிரதமர் பதவியை ஏற்பதற்குரியவரை அடையாளம் காண, முன்னாள் அமைச்சர் கோ பூன் வான், நான்காம் தலைமுறைத் தலைவர்களையும் இதர அமைச்சர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். தாம் சந்தித்துப் பேசிய 19 பேரில் 15 பேர், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கையே தங்கள் முதல் தெரிவாகக் குறிப்பிட்டதாகத் திரு கோ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றம் குறித்து நிலவிய நிச்சயமற்ற நிலை அதனால் ஒரு முடிவுக்கு வந்தது. பதவியேற்பு நிகழ்ச்சி மே மாதம் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில், தலைமைத்துவ மாற்றம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் முக்கியமான தருணம் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“லாரன்சும் நான்காம் தலைமுறைத் தலைவர்களும் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கடினமாக உழைத்துள்ளனர். குறிப்பாக, கொவிட்-19 கிருமிப் பரவலின்போது அவர்கள் அவ்வாறு உழைத்துள்ளனர்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“முன்னேறு சிங்கப்பூர் இயக்கத்தின் மூலம், அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய தலைமுறைக்கான தேசிய நடவடிக்கைகள் பட்டியலை உருவாக்கவும் சிங்கப்பூரர்கள் பலருடன் இணைந்து அவர்கள் பணியாற்றியுள்ளனர்,” என்று திரு லீ அப்பதிவில் கூறியுள்ளார்.

நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழு, சிங்கப்பூர் நன்கு செயல்படுவதையும், தொடர்ந்து முன்னேறுவதையும் உறுதிசெய்யக் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் லீ, மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை இணைந்து உருவாக்குவதற்குத் துணைப் பிரதமர் வோங்கிற்கும் அவரது குழுவிற்கும் முழுமையான ஆதரவு நல்கும்படி சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.