துரை

மு க ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக நிச்சயம் வெற்றி பெறாது என முக அழகிரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வியுற்று டிபாசிட் இழந்துள்ளது.    இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகனும்,  செயல் தலைவர் ஸ்டாலினின் சகோதரருமான மு க அழகிரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.     இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில்,   “நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து டிபாசிட் இழந்தது ஏன்?   கருணாநிதி செயலுடன் இருக்கும் வரை பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.   ஆனால் இப்போது டிபாசிட் இழக்கும் நிலையை அடைந்துள்ளோம்.    செயல் தலவரான ஸ்டாலின் செயல்பாடு அவ்வாறு உள்ளது.

அதிமுக, மதிமுக வில் இருந்து புதிகாத வந்தவர்களுக்கு பதிவிகள் வாரி வழங்கப் படுகிறது.   டிபாசிட் இழக்க அதுவே காரணம்.    ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றிக் கொண்டுள்ளார்.    ஆனால் அவர் இருக்கும் வரை எந்த வெற்றியும் கிடைக்காது.  அதற்குக் காரணம் அவர் கூட இருப்பவகளெல்லாம் அப்படி.   துரைமுருகன் கட்சியினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார்.   நீண்ட நெடும் காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு இது வேதனை அளிக்காதா?   இது என் குமுறலும் கூட.

கட்சியின் உண்மையான தொண்டன் ஒவ்வொருவருக்கும் இந்த மனநிலை உண்டு.   நான் எனது கட்சித் தொண்டனுக்காக கேள்வி கேட்டதால் திமுக விலிருந்து வெளியேற்றப் பட்டேன்.   ஒருவரை மட்டும், ’தம்பி வா, தலைமை ஏற்க வா’ என கூப்பிட்டால் போதாது.    மாறுதல், திற்மை ஆகியவை அவசியத் தேவை.   வேனில் ஏறிக் கேட்டல் மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.   கருணாநிதி மாதிரி களப்பணியில் இறங்க வேண்டும்.   தினகரன் தனது களப் பணியால் தான் வெற்றி பெற்றுள்ளார்.   அவரைப் பொறுத்தவரை புதுச் சின்னம்,  மற்றும் 33 ஆவது இடத்தில் இருக்கும் பெயர்,  ஆகியவைகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

உதயசூரியன்,  இரட்டை இலை போன்ற பிரபலமான சின்னங்களையே தோற்கடித்தது அவருடைய களப்பணி தான் ஆகும்.     திமுக வளர்ச்சி அடைய வேண்டும் எனில் துரோகிகளுக்கு பதவி அளிப்பதை நிறுத்திவிட்டு களப்பணியில் இறங்க வேண்டும்.   இப்போதும் பல மாநிலங்களில் எதிர்பாராத பல கட்சியினர் ஆட்சி அமைக்கின்றனர்.   என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.  தப்பு ஏதும் செய்யாத நான் மன்னிப்புக் கேட்கத் தேவை இல்லை.   திமுக வில் மாற்றம் அவசியம் தேவை.    அதன் மூலம் தான் கட்சி வெற்றிப் பாதையில் செல்ல முடியும்”  எனக் கூறி உள்ளார்.