எளிமையின் சிகரம்: பழங்குடி மக்களுக்கு சேவை செய்யும் ஐஐடி பேராசிரியர்!

Must read

டில்லி:1sagar-1
மெரிக்காவில் பட்டம் பெற்ற முன்னாள் ஐஐடி பேராசிரியர் தற்போது எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருகிறார்.
படத்தில் இருப்பவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, ஐஐடியில் முன்னாள் ரிசர்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோருக்கு பாடம் நடத்திய பேராசிரியர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அதுதான் உண்மை…
எளிமையின் மற்றொரு பெயர் முனைவர் அலோக் சாகர். டெல்லி ஐஐடியில் பொறியியல் படிப்பு முடித்து, முதுகலைப்படிப்பையும் முனைவர் பட்டத்தையும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்று பின்னர் ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரிடம் படித்து சிகரங்களைத் தொட்டவர்கள் ஏராளம். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களில் ஒருவர்.
1-iit-1
எளிய மக்கள்பால் அன்பும் பாசமும் கொண்ட அலோக் சாகர் தனது பதவியை துறந்துவிட்டு கடந்த 32 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் எளிமையாக வாழ்ந்து அவர்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.
அடித்தளமக்களுக்கு அவர்களுடன் ஒருவனாக இருந்து சேவை செய்வதே சரியான வழிமுறையாகும் என்பது இவர் கருத்து. இவர் இதுவரை இப்பகுதியில் 50,000 மரக்கன்றுகளை நட்டிருப்பதாக தெரியவருகிறது.
இவரிடம் இருக்கும் சொத்துக்கள் மூன்றே மூன்று குர்தாக்களும், ஒரு சைக்கிளும்தான். இவர் வாழும் பகுதியில் மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. இவரது முழுநேரப் பணி விதைகளைப் பெற்று அதை பழங்குடி மக்களிடையே விநியோகம் செய்வதுதானாம். ஆரம்பத்தில் இவரை சந்தேகமாகப் பார்த்த அப்பகுதி அதிகாரிகள் இவரது கல்வித் தகுதிகளைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தே விட்டார்களாம்.
இவ்வளவு காலம் இப்படியொரு எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ததுகூட வெளியுலகுக்கு தெரியாத வகையில் உட்சபட்ச எளிமையைக் கடைப்பிடித்திருக்கிறார் இந்த போற்றப்படத்தக்க மனிதர்!

More articles

Latest article