‘மாநாடு’ படத்துக்கு முன்பாகவே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பில் நேற்று (அக்டோபர் 10) முதல் கலந்து கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
இதில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
முதன்முறையாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.