‘மாநாடு’ படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதையடுத்து, ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை எடுக்கப் போகிறேன், என அறிவித்திருந்தார் சிம்பு .

தற்போது சென்னைக்கு திரும்பியுள்ள சிம்பு ‘மாநாடு’ தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அந்த படத்தில் தானே நடிக்கிறேன், என்று சொல்ல இருக்கிறாராம்.

ஆனால் வேறு ஹீரோவை வைத்து படத்தை தொடங்கலாமா, என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இந்நிலையில் இது தொடர்பாக சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டு பேச, , எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளரை சந்திக்கலாம், என்று கூறியிருக்கிறாராம் வெங்கட் பிரபு .