சென்னை: தமிழக சட்டமன்றத்தில், 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக சென்னை மெரினால் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செய்தார். தொடர்ந்து, தலைமைச் செயலகம் வருகை தந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதிலுரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. இதைத் தொடர்ந்து காலை 10.5மணி அளவில் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதன்மறையாக இன்று தாக்கல் செய்தார்.
மாபெரும் தமிழ் கனவு எனும் தலைப்பில் 7 முக்கிய அம்சங்களுடன் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார் முந்தைய திமுக அரசுகளின் சாதனைகளை பட்டியலிட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையாற்றி வருகிறார்.
தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது, 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைன் 25 இந்திய மற்ற உலக மொழிகளில் மொழி பெயர்க்க 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஒரு ஆண்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது இந்த பேரவையில் தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.