முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ராகுல்காந்தியுடன் 45 நிமிடங்கள் நேரில் பேச்சு

Must read

டெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் ராகுல்காந்தியை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
முன்னனள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அரசியலில் குதித்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். பாஜ.வில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருந்தார். ‘‘ஆவாஸ் இ பஞ்சாப்’’ என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கினார். கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்படலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த முடிவை கைவிட்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சித்துவின் மனைவி ஏற்கனவே அகாலிதள தள தலைவர் பர்கத் சிங்குடன் கடந்த மாதம் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனது கணவரும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை. இந்த சூழ்நிலையில் ராகுல்காந்தியுடனான சித்துவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
Former Cricketer Navjot Sidhu meets Rahul Gandhi . He is likely to join Congress party. Boost for Congress party ahead of Punjab Assembly Election.

More articles

Latest article