சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும். அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் நடிகர் சித்தார்த் வலைத்தளத்தில், ‘‘பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் ஏமாற்றுக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவது இல்லை” என்ற பதிவை பகிர்ந்தார். இது சர்ச்சையானது.

இதுகுறித்து சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து சித்தார்த் ‘‘யாரையும் மனதில் வைத்து அந்த பதிவை நான் வெளியிடவில்லை. யாருடையை பெயரையும் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம். சமூக வலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பு அல்ல. நான் அன்றைய தினம் வாழ்க்கை குறித்து இயக்குனர் அஜய்பூபதியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனது வாழ்க்கையில் நடந்த விஷயம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தேன். எங்கள் வீட்டுக்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால் என்னைத்தான் அப்படி சொன்னார் என்று யாரும் வேறுவிதமாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது” என்றார்.

 

[youtube-feed feed=1]