பிக் பாஸ் 5 : ‘முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்க’.. ஸ்டார்ட் ஆன நாமினேஷன்….!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் கமல் வழக்கம் போல் போட்டியாளர்களுடன் உரையாடினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் முடிந்த நிலையில் முதல் வாரம் நாமினேஷன் ப்ராஸஸ் தொடங்கியுள்ளது.

முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸிடம் ‘இந்த பிக்பாஸ் சீசனின் முதல் நாமினேஷன். இந்த வீட்ல எல்லாருமே நல்லவங்கதானு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தா நல்லாருக்கும்னு பிக்பாஸ் சொல்வதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். பின்பு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று நாமினேஷன் செய்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், நாமினேட் லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த வார எவிக்ஷனுக்கு தேர்வான நபர்கள் இசைவாணி, பிரியங்கா, அக்ஷரா, நாடியா, நிரூப், அபிநய், இமான், அபிஷேக் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதற்கு நாடியா வச்சு செய்ஞ்சுட்டாங்க என்றும் பிரியங்கா, கொளுத்தி போடு என்றும் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில், இசை மற்றும் பாவ்னி ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பாவ்னி இந்த வீட்டில் சிலர் குரூப்பாக இருக்கின்றனர். நாம் அவர்களிடம் சென்று ஏதாவது பேசினால் கூட அதனை தவிர்த்து விட்டு வேறு பேசுவார்கள் கவனித்திருக்கிறேன் என கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஐக்கி எல்லாரும் உன்னை கூப்பிடுகிறார்கள் நீ ஏன் தனியாகவே இருக்கிறாய்? என பாவ்னியிடம் கேட்கிறார்.

 

More articles

Latest article