ருள்மிகு ஐராவதேசுவரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால் அதற்கு முன்பாக இத்தலம் தேவார காலத்தில் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, “நியமம்” வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலமான இத் தலத்தில் பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.