சென்னை:

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை  இன்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ‘தொழிற்சாலைகளால், நிலத்தடி நீர், மண் வளம் பாதிக்கப்படுவதை உதாசீனப் படுத்த முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்திருப்பது, நீதிமன்றத்தின் சுற்றுச் சூழல் குறித்த அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும், இதன் காரணமாக  தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறி உள்ளார்.