சென்னை: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். தமிழ் நாட்டிலேயே அதிக வாக்காளர்கள்  சோழிங்கநல்லூரில் உள்ளதாகவும், அங்கு 6.52 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து கட்சிகளின் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது,  தற்போதைய நிலையில்,  தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்தமுள்ள வாக்காளர்களின் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். அதோவது 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி  வெளியிடப்படும் என்றவர், ஜனவரி 1, ஏப்.1, ஜூலை 1, அக்.1ந்தேதிகளில்  18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளராக விண்ணப்பிக்கலாம் என்றவர், கடந்த ஆண்டு 6.2 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக குறைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும்,  நவம்பர் 9-ம் தேதி வாக்குச் சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்றவர்,   நவம்பர் 4, 5,18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.

இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம் என்றவர்,  “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேரடியாகவும், NVSP இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்   அனைத்து இளைஞர்களும் இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை இடம் பெற செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளி கல்லூரிகளில் முகங்கள் நடத்தி 18 வயது நிரம்பியவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய இருக்கிறோம். 40-49 வயதில் தான் அதிகபடியான வாக்காளர் உள்ளனர். சுமார் 1.37 கோடி உள்ளனர். அதில் 67.92 லட்சம் – ஆண்கள், 69.69 லட்சம் – பெண்கள் ஆவர். Voter help mobile app மூலம் கூட வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். 2019 ஆண்டு 68,036 வாக்குச்சாவடி மையம் இருந்தது. இந்த ஆண்டு 68,144 வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது”  என்றும் கூறினார்.