போபால்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், இன்று இரவு பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில முதல்வராக மீண்டும் சிவ்ராஜ்சிங் சவுகான் பதவி ஏற்பார் என தெரிகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவி ஏற்றார்.
இந்த ஆட்சி சுமார் 15 மாதங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாநிலத்தில் உள்ள இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர்.
இதனால் பெரும்பான்மையை இழந்த கமல்நாத், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சவுகான், மாநில முதல்வ ர்பதவிக்கு மீண்டும் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்.பி. அப்சர்வர் அருண் சிங், மற்றும் மாநில பொறுப்பாளர் வினய் சஹஸ்ரபுதே ஆகியோர் டெல்லியில் இருந்து வீடியோ காண்பரன்சிங் மூலம் கூட்டத்தில் இணைந்தனர்.
இதையடுத்து சவுகான் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமைக்கோரி, உடனே பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.