சென்னை:
சிவசங்கர் பாபா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவி களிடம் பாலியல் சில்மிஷம் செய்தாக கொடுத்த புகாரின் போரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பாய்ந்துள்ளன. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்குகள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். அதில், வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நம்பகத்தன்மையில்லை என கூறி சிவசங்கர் பாபா தரப்பு வாதிட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு புகார் அளித்த மாணவியை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்டம்பர் 15ஆம் தேத்திக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.