சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஸ்டாலின்,  அந்த மனுக்கள் மீது, திமுக ஆட்சி அமைந்ததும்  100 நாட்களில் தீர்வு காணப்படும்  என உறுதி அளித்தார். அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அதற்கான தனித்துறை உருவாக்கி அதற்கு தலைவர் ஷில்பாபிரபாகர் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதைத்தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள முதல்வர் அறையில் அமர்ந்து,  தமிழக முதல்வருக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதையடுத்து, அவர் ஏற்கனவே மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், முக்கிய 5  கோப்புகளில் கையெத்திட்டுள்ளார். அதன்படி,

முதல் அரசாணையாக கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000- குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

 உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில்,  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பெறபட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில்,   ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஷில்பாபிரபாகர் என்பவரை நியமனம் செய்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.