டில்லி:

மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமைச் செயலாளர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக டில்லி ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

இதற்கு டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் தனது டுவிட்டரில், ‘‘மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. டில்லியில் மிகத் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் நான் இலக்கை அடையவும், டில்லியை மாற்றவும் மிவ உதவியாக இருந்தனர்’’ என்று கெஜ்ரிவாலுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து ஷீலா கூறுகையில், ‘‘இங்கே சண்டை கிடையாது. பலதரப்பட்ட கருத்துகள் எழுவது ஆரோக்கியமான விஷயம் தான். இதை திறந்த மனதுடன் எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இவர் 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 3 முறை என மொத்தம் 15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்துள்ளார். இவரது பதவி காலத்தில் தான் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஷீலா தீக்ஷித் அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஷீலா தலைமையிலான ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதால் இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தார்.

ஆனால், தற்போது டில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நடக்கிறது. நல்ல பணிகளை செய்யவிடாமல் மத்திய அரசு தடுப்பதாக புகார் கூறப்படுகிறது. டில்லி துணை முதல்வர் மனிஷா மனிஷா தற்போது மாநிலத்தின் மூத்த அதிகாரி மீது தீவிர குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு தொடர்பாக விசாரணை நடத்த எனக்கு உரிமை இல்லை என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசின் கருத்தை அவர் கட்டண நிர்ணய குழு கூட்டத்தில் சரியாக எடுத்துரைக்கவில்லை என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகள் மற்றும் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு கட்டண உயர்வு அவசியம் என்று டில்லி மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் கருதுகின்றனர். 8 ஆண்டுகளுக்கு பிறகே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 5 கி.மீ. வரை ரூ. 10 கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பரபரப்பு அல்லாத நேரங்களில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.