க்னோ

பிரபல நடிகரும் சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவருமான சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியின் இணைந்துள்ளார்.

பிரபல நடிகரும் முன்னாள் பாஜக அமைச்சருமான சத்ருகன் சின்ஹா கட்சி தலைமையுடன் கருத்து வேற்றுமையில் இருந்தார். அதனால் அவர் மீது பாஜக  அதிருப்தியில் இருந்தது.  கட்சியையும் அரசையும் குறித்து கடுமையாக விமர்சித்து வந்த சத்ருகன் சின்ஹா இந்த மாதம் ஆறாம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து பீகாரில் உள்ள தனது தொகுதியான பாட்னா சாகிப் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்துள்ளார். அவர் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் கை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் ரவிதாஸ் மல்கோத்ரா, “பூனம் சின்ஹா வரும் 18 ஆம் தேதி அன்று லக்னோ தொகுதியில் போட்டியிட வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என நான் கேடுக்கொள்கிறேன். நமது பொதுவான எதிரியான பாஜகவை தோற்கடிப்பதற்காக நான் இவ்வாறு கேட்டுக் கொள்கிறேன்” என அறிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.