டில்லி,

சிசி தலைவர் பதவியில் இருந்து ஷசாக் மனோகர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிசிசிஐ-ல் ஏற்பட்ட குழப்பம் காரணமாக உச்சநீதி மன்றம் தலையிட்டு பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐசிசி தலைவர் பதவியில் இருந்து ஷசாங் விலகியிருப்பது பலவித சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்புக்கு வந்தார் ஷசாங். இன்னும் இரண்டு ஆண்டுகாலம் அவரது பதவி இருக்கும் நிலை யில், அவர் திடீரென தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது வியப்பை தருகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா குறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி தேவ் ரிச்சர்ட்சனுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பிவிட்டதாகவும் ஷசாங் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிக்கையில், ஐசிசிக்கு அடுத்த தலைவர் நியமிக்கும் வரை,  ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி கூடுதலாக தலைவர் தலைவர் பொறுப்பை கவனிப்பார் என்று கூறி யுள்ளது.