புதுடெல்லி:
பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த கருத்துக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை “வெட்கக்கேடான மதவெறி” என்று குற்றம் சாட்டி டிவிட்டர் செய்துள்ளார்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், டெல்லி: உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது. பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.