ஜெய்ப்பூர்

ரும் 10 ஆம் தேதி ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடப்பதால் காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

வரும் 10 ஆம் தேதி ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு நான்கு இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.  இங்கு காங்கிரஸ் 3 மற்றும் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.   ஆனால் சுபாஷ் சந்திரா ஐந்தாவது வேட்பாளராகக் களமிறங்குவதால் அந்த இடத்துக்கு இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது.  காங்கிரஸைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரமோத் திவாரி இந்த இடத்துக்கு போட்டியிடுகிறார்.

ஏற்கனவே ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள். பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரான கன்ஷியாம் திவாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டனர்.

தற்போது 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெற 41 வாக்குகள் தேவை. காங்கிரஸுக்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸைப் பொறுத்தவரையில் இரண்டு இடத்தில் உறுதியான வெற்றி உள்ளது. மேலும் ஒரு வேட்பாளர் வெற்றி பெறக் கூடுதலாக 15 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களது எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. கூட்டதுக்கு பின்பு பாஜக தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை இரண்டு பேருந்துகளில் ஏற்றி இன்று உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ராஜஸ்தானின் ஆளும் காங்கிரஸ் தனது சட்டப்பேரவை உறுப்பினர்களை உதய்பூருக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் குதிரை பேரத்திற்குப் பயந்து காங்கிரஸ் கட்சி மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை உதய்பூரில் உள்ள ஹோட்டலுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளத.