22 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுவையூட்டப்பட்ட பால், பழச்சாறுகள், சாண்ட்விச்கள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றைப் பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளது.

டீ, காபி, சூப் போன்ற பானங்களுக்கு சுத்தமான தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை. பெரும்பாலான ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை என்றும் 14 பணிமனைகளை ஆய்வு செய்ததில் ரயிலில் வழங்கப்படும் போர்வைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சலவை செய்யாமல் உபயோகப்படுத்துவது தெரியவந்துள்ளது.

ஸ்வச் பாரத் என்ற பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டதாக விளம்பர படுத்தப்படும் நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளங்களில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை நீடித்து வருவது கடந்த எட்டு ஆண்டுகளில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

ரயில்வே துறையில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப போதுமான நிதி ஆதாரம் இல்லை என்றும் மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

இரவு நேரங்களில் கூட சரக்கு ரயில்களை ‘கார்ட்’ இல்லாமல் இயக்கும் அளவுக்கு ரயில்வே துறை நவீனமயமாகி உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் லாபமீட்டும் துறையில் ரயில்வே துறை உள்ளதாக பட்ஜெட்டில் கூறியிருந்த நிலையில் சி.ஏ.ஜி.யின் இந்த அறிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.