வெட்கக்கேடு: தம்பித்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்!

Must read

சென்னை,

சிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தம்பித்துரை அறிக்கை வெளியிட்டி ருப்பது வெட்கக்கேடான செயல் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

‘துணை சபாநாயகர்’ லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற துணைசபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றதிலிருந்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பதவி விலக செய்ய கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு பிரிவினர் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், அதிமுக எம்.பி.யான தம்பிதுரையும் சசிகலா முதல்வராக வேண்டும் என அறிக்கை யும் விடுத்துள்ளார். இது அதிமுக கட்சியினர் மத்தியிலும், தமிழக மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தம்பித்துரையின் தரங்கெட்ட அறிக்கைக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள்.

அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது.

தமிழக ஆளுநரும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டுக்குச் சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமிழக முதலமைச்ச ராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, “ஓ.பன்னீர்செல்வம் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்” என்றும், “சசிகலா முதலமைச்சராக வேண்டும்” என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இன்னும் சொல்வதென்றால், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதலமைச்சர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தான், ஆங்கிலப் பத்திரிகைக்கு கொடுத்தப் பேட்டியொன்றில், “முதலமைச்சர் பன்னீர்செல்வத் துக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப் படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது” என்று கூறியிருந்தேன்.

இப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில்,

திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை “தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி,

“சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.

குறிப்பாக “துணை சபாநாயகர்” லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானா லும் கொடுக்கட்டும்.

அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்க டியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.,

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article