நெட்டிசன்
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
பேரு ஷாலினி சவுகான்..
மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!).
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சீனியர் 11 பேரில் 9 ஸ்டுடென்ட்ஸ் கைது..
கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
24 வயது ஷாலினி வேறு யாரும் அல்ல, காவல்துறையை சேர்ந்தவர்.
மேற்படி மருத்துவக் கல்லூரியில் ராகிங் பிரச்சினை பெரும் தலைவலியாக இருந்ததால், ஷாலினியை போலீஸ் டீம் மாணவி போல் களம் இறக்கி உள்ளது.
ஷாலினியும் மாடர்ன் உடைகளை அணிந்து மருத்துவ புத்தகங்களை சுமந்து கொண்டு கல்லூரியில் பல மணி நேரம் தினமும் கேன்டீன் உள்ளிட்ட பகுதிகளில் அசல் மருத்துவ மாணவி போலவே வலம் வந்திருக்கிறார்.
இளம் பெண் தோரணைக்கேற்ப வயது குண்டான தகவல்களை ஜாலியாக பகிர்ந்து கொண்டு, ராக்கிங் கோஷ்டிகளை அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறார்.
இதிலிருந்து நாம் சொல்ல வருவது என்னவென்றால், இங்கே பேஸ்புக்கில் இளம் பெண்களின் இன்பாக்ஸை அனாவசியமாக நோண்டாதீர்கள்.. ஷாலினிக்கள் உலா வரலாம்.
எனி ஹெல்ப் ஷாலினி? என போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்