பெங்களூரு: மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒரு மாநில அமைச்சர், நான் பொரம்போக்கு, போக்கி என்பதுபோல, காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் பிஎஸ்டி (டாக்டரேட்) வாங்கியவன் என்று பேசியிருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில், 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதை விளக்கி, கர்நாடகாவின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு மாணவர்களிடையே உரையாற்றினார்.  தான் படிக்கும் காலத்தில்,  “வகுப்பறையில் எல்லோர் முன்னிலையிலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றாய் என ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் காப்பி அடித்துத்தான் தேர்ச்சி பெற்றேன் எனத் தெரிவித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் காப்பி அடித்துத்தான் பாஸ் ஆனேன். நான் காப்பி அடிப்பதில் பிஎச்டி முடித்தவன்” என்றும் பேசியதுடன்,  மோசடி செய்வதில் பி.ஹெச்.டி. வாங்கியவன் என தனது மோசடியை பெருமையாக எண்ணி பேசி மகிழ்ந்தார்.

அவரது பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு நல்போதனைகளை கூற வேண்டிய அமைச்சரே, நான் காப்பியடித்துதான் பாஸானேன் என்று பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான கண்டண்ங்கள் குவிந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமாருக்கு, முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, பார்லிமென்ட் அல்லாத மொழியைப் பயன்படுத்தியதற்காக கோபமடைந்த சில நாட்களுக்குப் பிறகு இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.