லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ என்ற பாடலை சாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் திமிறி எழுடா பாடலுக்காக மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோர் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இவர்கள் குரலை மீளுருவாக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான சாகுல் ஹமீத் 44 வயதில், 1997ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அகால மரணமடைந்தார்.

மற்றொரு பாடகரான பம்பா பாக்யா 2022ம் ஆண்டு தனது 41வது வயதில் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் இடப்பெற்ற பொன்னி நதி பாக்க வேணும் பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.