​அமித்ஷா கூட்டத்தில்  காலி நாற்காலிகள்! :  பாஜகவினர் ஏமாற்றம்

Must read

download (1)
 
அகில இந்திய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட  குமரி மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியினர் குறைந்த அளவே வந்தனர்.  ஏராளமான இருக்கைகள் காலியாக கிடந்தன. இதனால் பாஜகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அந்தக் கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் கலாலியாகவே இருந்தன. பாஜக தொண்டர்கள் மிகக் குறைவாகவே வந்திருந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளால் ஊழலை ஒழிக்க முடியாது.   விபத்து காப்பீடு, இலவச கேஸ், மின்சாரம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர அதிமுக தயாராக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
 

More articles

Latest article