சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13வயது சிறுமி ஒருவர் காமுகரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனால், அந்த சிறுமி, கருவுற்றார். அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை  நீதிபதி அப்துல் விசாரித்து வருகிறார்.

வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் மனம், உடல் நலம், மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, 20 வாரங்களை கடந்த கருவையும் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட், சிறுமியின் எதிர்காலம் மற்றும்  மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க அனுமதி அளிப்பதாக உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,  தமிழக அரசு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சிறுமியின் கருவை அகற்ற வேண்டும். அகற்றிய கருவை, வழக்கு விசாரணைக்காக, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பான அறிக்கையை , வரும் 22ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.