சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  முன்னாள் டிஜிபி ராஜேஸ்தான் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ராஜேஸ்தாஸ்க்கு உதவியாக இருந்த முன்னாள் எஸ்.பி.யின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன

கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை டிச.20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய முன்னாள் எஸ்.பி.யின்  மனுவும், பாலியல் வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று கோரியும் முன்னாஸ் டிஜிபி ராஜேஸ்தான் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் . முன்னாள் டிஜிபியின் மனுவையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.