சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபலமான கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல்  ஆசிரியர் ராஜகோபாலன் தன்னிடம் படிக்கும் , மாணவிகளுக்கு  ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர்மீது காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர்   ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் கேட்டு,   சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து,   ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.