சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து புற்றீசல் போல கிளம்பி வருகிறது. தற்போது 3வது பள்ளியாக சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிமீது புகார் எழுந்துள்ளத. புகார் குறித்து விளக்கம் அளிக்க  பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேகே நகர் பத்மா சேஷாத்திரி, கீழ்ப்பாக்கம்  மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து, இதையடுத்து, குறிப்பிட்ட ஆசிரியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் பிஎஸ்பிபி  ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டன. அதையடுத்து நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது அங்கு படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது குஊறித்து விளக்கம் அளிக்க  பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ப

ள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செனாய் நகர், புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர்/முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அன்னார் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடயிருந்து புகார் ஏதும் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா..? என்ற விவாத்தினை இச்செயல்முறை இடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகம் சமர்பித்திட பள்ளியின் தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 3 பள்ளிகளுக்கும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி,  சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், புகார் அளித்த மாணவிகள் என அனைவருக்கும், மூன்று வெவ்வேறு தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர், சம்மந்தப்பட்ட ஆசிரியர், புகார் கொடுத்த மாணவிகள் என அனைவருக்கும் வரும் ஜூன் 10ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜூன் 8ஆம் தேதியும், செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் வரும் ஜூன் 7ஆம் தேதியும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அளிக்க வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.