பாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு..
‘ரா’’ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், நிஷா.
உயர் அதிகாரிகள் மீது அவர் பாலியல் புகார்களைத் தெரிவித்திருந்தார்.
அந்த புகாரை விசாரிக்க ‘ரா’ காலதாமதம் செய்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் நிஷா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நிஷா கொடுத்த புகாரை விசாரிக்கக் காலதாமதம் செய்தது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நிஷா விவகாரத்தில் இந்த நீதிமன்றம், மற்றொரு தீர்ப்பையும் அளித்துள்ளது.
உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்த நிஷா, பணியில் இருந்த போது, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் எண்ணத்தில் நிஷா இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
ராவில் முகம் தெரியாமல் பணியாற்றவேண்டிய நிஷாவுக்கு போதுமான ‘விளம்பரம்’ கிடைத்துவிட்டது என்று சொல்லி, அவருக்குக் கட்டாய ஓய்வு அளித்து, மத்திய அரசு ஆணையிட்டது.
அந்த ஆணை செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் , தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இழப்பீடு கிடைத்த நிஷாவுக்கு, வேலை மட்டும் கிடைக்கவில்லை.
-ஏழுமலை வெங்கடேசன்