கடனை கேட்ட மகன்.. குத்திக்கொன்ற தந்தை..

’பெத்த மனம் பித்து..பிள்ளை மனம் கல்லு’’ என்பார்கள்.

குஜராத் மாநிலத்தில் இந்த பழமொழியை தலைகீழாய் மாற்றி எழுதியுள்ளார், பண வெறிபிடித்த ஒரு தந்தை.

அவர் பெயர், அப்துல் ஹமீது.

சூரத்தில் உள்ள ரனிதலாவ் பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது ஒரே மகன் இம்ரான். லண்டனில் ஓட்டலில் பார்த்து வந்தார். 10 ஆண்டுகளாக அங்கேயே ’செட்டில்’ ஆகி விட்டார்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தோடு  சொந்த ஊருக்கு வந்தவர் திரும்பி லண்டன் செல்வதாக இருந்தார்.

கொரோனாவால்,சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,இங்கிலாந்து அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் இம்ரானுக்கும் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒரே பிள்ளையான இம்ரானைச் சொந்த தகப்பன், நேற்று கத்தியால் கொலை செய்துள்ளார்.

காரணம்?

காசு..பணம்..துட்டு..மணி..மணி..

இம்ரான், சொந்த ஊரில் உள்ள வீட்டைப் புதுப்பிக்க  தந்தையிடம்  ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

அதைத் திருப்பி கேட்டபோது, தந்தை-மகனுக்கு இடையே தகராறு. மோதல் வெடித்து, ஒரு கட்டத்தில் மகனைக் குத்திக்கொன்றே விட்டார், அப்துல்.

–  ஏழுமலை வெங்கடேசன்