சென்னை:  தமிழ்நாட்டில், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை  உடன்குடி என பல பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகள்  பாலியல் தொல்லைகளுக்கு ஆளான நிலையில், தற்போது  திருச்சியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து  காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தும் உடன்டியாக நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதி மக்கள்  பள்ளியை சூறையாடினர். இதையடுத்தே, இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே  கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், மரக்காணம், தென்காசி, பாளையங்கோட்டை தனியார் பள்ளி, பாளையங்கோட்டை கல்லூரி,  உடன்குடி தனியார்ப ள்ளி உள்பட பல  பகுதிகளைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளிலும்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடைபெற்றுள்ள  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது உள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் தமிழ்நாடு அரசும், காவல்துறையுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க தவறுவதால், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்  தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார்.  இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான இன்னொரு பள்ளியின் மீது கற்கள், கட்டையை வீசி பொதுமக்கள் சூறையாடிய நிலையில் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி,  பள்ளி முடிந்த பிறகு  தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் செய்தனர்.

அதன்படி, மணப்பாறை மகளிர் போலீசில் பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார் உள்பட பள்ளி நிர்வாகம் மீது  பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், பள்ளி நிர்வாகத்திடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவியின் குடும்பத்தினர் தங்களது  உறவினர்கள்  காவல்துறையினர் மீது அதிருப்தி அடைந்த நிலையில், மாணவி பயிலும் பள்ளி நிர்வாகம் நடத்தும் இன்னொரு பள்ளியின் முன்பு திரண்டு கல், கட்டைகளை எடுத்து பள்ளியை சூறையாடினார். இதனால் பள்ளியின்  வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பூந்தொட்டிகளும் தூக்கி வீசப்பட்டு உடைக்கப்பட்டது.  பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் அடித்து உதைத்து தலைகீழாக கவிழ்த்தனர்.

அதன்பிறகே,  போலீசார் வந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை அவர்கள் கேட்கவில்லை. தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் திருச்சி – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சம்பவம் வைரலானது.  அந்த பகுதியில் அருகே இருந்த மக்களும் கூடினர். இதனால் போக்குவரத்தும் தடை பெற்றது.

இதையடுத்து திரு ச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து,   பள்ளி தாளாளர் சுதா, அவரது கணவர் வசந்தகுமார், இளஞ்செழியன் உள்பட 4 பேர் கைது செய்தனர். தலைமை ஆசிரியர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டங்களைத் தொடர்ந்து, பாலியல் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மாணவிகளுக்கு மதுகொடுத்து பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ முதல்வர் மற்றும் செயலருக்கு உடனடி ‘நெஞ்சுவலி’……

நெல்லை அருகே மேலும் ஒரு பள்ளியில் பாலியல் சம்பவம்: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு!

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது