பாக்தாத்:
எஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் “செக்ஸ் அடிமை” பெண்களை  ஃபேஸ்புக்கில் ஏலம்விட்டு விற்பனை செய்யும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர்கள், யசிதி இன பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணிகளை கூட கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.எஸ். பயங்கரவதிகளிடம் சிக்கி பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்கள் ( கோப்பு படம்)
ஐ.எஸ். பயங்கரவதிகளிடம் சிக்கி பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்கள் ( கோப்பு படம்)

இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருவூலக் கட்டிடம் குண்டு வீசித் தாக்கப்பட்டதில் அங்கு வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான பணம் எரிந்து சாம்பலாகிவிட்டது.
இந்த சூழலில் நிதி திரட்ட  பயங்கரவாதிகள் தங்களிடம் உள்ள செக்ஸ் அடிமைகளை ஃபேஸ்புக் மூலம் ஏலம்விட்டு  விற்பனை செய்கிறார்கள். அவர்கள் செக்ஸ் அடிமை பெண்களை ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள். ஃபேஸ்புக்கில் செக்ஸ் அடிமை பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு விரும்புவோர் அவரை வாங்கிக் கொள்ளலாம் என விளம்பரம் செய்கிறார்கள். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசம் ஏராளமான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.