1
ந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை  6.2 ரிக்டர் அளவில்  நில நடுக்கம் ஏற்பட்டது.   நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் , சிக்லாப் , பொங்கோல், தோபாயோ போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது. அப்பகுதியில கட்டிடங்கள் குலுங்கின.
சிங்கப்பூரில் இருந்து 517 கிலோ மீட்டர் தொலைவில் மையமாக கொண்டு ஏற்பட்ட  இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று நியூஸ் ஏசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.